Skip to main content

சாலை விரிவாக்கப்பணி; நிலைதடுமாறிய பேருந்து - கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

ariyalur royapuram bus incident police investigation started 

 

அரியலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து செந்துறை வழியாக தனியார் பேருந்து ஒன்று திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுமார் 50 பயணிகளுடன் செந்துறை அருகே உள்ள ராயபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நீளமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலைதடுமாறிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்தார்.

 

மேலும், விபத்தில் காயமடைந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அவ்வழியாக வந்த வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !