'This area is under my control' - the young man who took the reels at the police station

காவல் நிலைய வளாகத்தில் இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல் நிலைய போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த சிவபாரதி என்பவர் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஒட்டியதாக வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை திருப்பி மீட்டு எடுத்து வந்துள்ளார். கச்சிராயபாளையம் காவல் நிலையத்திலிருந்து தான் இருசக்கர வாகனத்தை எடுத்து விட்டதாகவும், இந்த ஏரியா என் கன்ட்ரோல் எனவும் காவல் நிலையத்தில் இருந்து மாஸாக வெளியே நடந்து வருவது போன்று வீடியோவை எடுத்துக் கொண்டு மீண்டும் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வரும் நிலையில் தற்போது காவல் நிலையத்தில் இருந்து இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.