தமிழகத்தின் வாக்காளர்கள் விவரத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சிறப்பு முகாமில் சுமார் 10 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தற்பொழுது தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள்-3,12,26,759 பேரும், பெண் வாக்காளர்கள்-3,23,91,250 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்-7,804 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 10,17,456 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 2,86,174 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. 18 முதல் 19 வயதுடைய 4,32,600 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. சோழிங்கநல்லூரில் 7,11,7755 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகை கீழ்வேளூர் தொகுதி உள்ளது. கீழ்வேளூர் தொகுதியில் 1,78,517 வாக்காளர்கள் உள்ளனர். வெளியாகியுள்ள வாக்காளர் பட்டியலை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.