Skip to main content

ஆரணி ஆற்றில் வெள்ளம்... ஊத்துக்கோட்டையில் தரைப்பாலம் துண்டிப்பு!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

Arani river floods

 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றின் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

 

தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று (07.11.2021) 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று அந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை வந்து சேர்ந்துள்ளது. அதேபோல் நந்தனம் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப்பகுதி மக்கள் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பா.ஜ.க நிர்வாகி; அதிரடி காட்டிய போலீசார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP worker hits bank manager with sandal in thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் பிரபல வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் பா.ஜ.க இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்கச் சென்றுள்ளார். 

அப்போது, அந்த ஏ.டி.எம் மையத்தில் பொறியாளர் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தினை சரி செய்து கொண்டிருந்தார். ஆனால், அதையும் மீறி அபிலேஷ் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் கார்டை மெஷினில் செலுத்தியுள்ளார். இதனால் அந்த பொறியாளர், மெஷின் சர்வீஸ் செய்வதாகவும், எனவே பணம் எடுக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து, அபிலேஷ் பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை சி.சி.டி.வி காட்சி வழியாக கண்ட வங்கி உதவி மேலாளர் பிரதீப் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து, ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கூடாது என்று அபிலேஷிடம் கூறியுள்ளார். 

ஆனால், அபிலேஷ், வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர், பிரதீப்பை தகாத வார்த்தையால் பேசி அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதிலும் ஆத்திரம் அடங்காத அபிலேஷ், தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து பிரதீப்பை தலையில் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், அபிலேஷை தடுத்து வெளியே அனுப்பினர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மணவாள நகர் போலீசார், அபிலேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வங்கி உதவி மேலாளரை செருப்பால் அடித்து தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.