Skip to main content

“காதலுக்கு மரியாதை” - கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

 

AR Rahman answerd to Kasthuri tweet

 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இருப்பினும் மொழிப்பற்று என்று வந்துவிட்டால் தாய்மொழியான தமிழின் பக்கமே நிற்பார். அதனால் தமிழர்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படும் போதெல்லாம் தனது கருத்துகளை சத்தமே இல்லாமல் சற்று காட்டமாகவே வெளிப்படுத்தி வருகிறார். 

 

கடந்த காலங்களில் அவர் பேசிய மேடைகளில் எனக்கு இந்தி தெரியாது. தயவு செய்து தமிழில் பேசுங்கள் என்று கூறியதோடு, பிரபல விருது விழாவில் கூட தமிழிலேயே பேசி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பார். அந்த வகையில் சமீபத்திய தமிழ் விருது விழாவில் அவரின் மனைவியிடம் இந்தியில் பேச வேண்டாம் என்று கூறியிருந்தார். பின்பு அவரது மனைவி, மன்னித்துவிடுங்கள். எனக்கு தமிழ் சரளமாக பேச தெரியாது என்று ஆங்கிலத்தில் பேசுவார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

 

இந்த நிலையில், இதனைக் குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி, “என்னது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய்மொழி என்ன? வீட்டுல, குடும்பத்தில என்ன பேசுவாங்க?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “காதலுக்கு மரியாதை” என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார். 

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !