Skip to main content

21 ஆம் தேதி விருப்பமனு-அதிமுக அறிவிப்பு!

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நான்கு தொகுதிகளில்  அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு  வரும் 21 ஆம் தேதி  முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 

admk

 

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய  நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22 தொடங்கும், ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாள், ஏப்ரல் 30 வேட்புமனு மறுபரிசீலனை, மே 2 வரை வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம், மே 19 வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கை என தேர்தல் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.   

 

இந்நிலையில் நான்கு தொகுதிகளில்  அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு  வரும் 21 ஆம் தேதி  முதல் விருப்பமனு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்