கடலூரில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி, இளைஞர் அணி சார்பில் இரத்ததான முகாம் மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். முகாமில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர திமுக செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், தனஞ்ஜெயன், மருத்துவ அணி அமைப்பாளர்கள் மருத்துவர் செல்வம் , மருத்துவர் சிவசெந்தில், மருத்துவர் அருண் , துணை அமைப்பாளர்கள் மருத்துவர் அக்ஷயா, டேவிட், இளங்குமரன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திக், இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், முதல்வரின் பிறந்த நாளன்று ரயிலில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த திருவாரூர் கர்ப்பிணியை நள்ளிரவில் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள், இரத்த தானம் வழங்கிய இளைஞர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேயர், பாராட்டி சிறப்பு செய்தார்கள். மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் பால. கலைக்கோவன் ஏற்பாட்டில் நடந்த இரத்த தான முகாமில் “நாடும் நமதே, நாற்பதும் நமதே” என முதல்வர் குறிப்பிட்டதைக் குறிக்கும் வகையில் 40 கிலோ கேக் வெட்டிக் கொண்டாடினர்.