Published on 14/05/2024 | Edited on 14/05/2024
சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வராக பணியாற்றி வருபவர் பழனி. இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து இவர் மீது நேற்று (13.05.2024) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 06.30 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சுமார் 5 மணி நேரமாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.