Announcement of prizes for Chennai metro train passengers

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நீல வழித்தடத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலும், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என 54.6 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் ‘சிங்கார சென்னை’ அட்டைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசுப் பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Advertisment

இந்நிலையில், இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்காரச் சென்னை அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாகப் பயணம் செய்யும் முதல் 40 பயணிகளைத்தேர்வு செய்து அவர்களுக்குப் பரிசுப் பொருள் வழங்கப்படும்.

Advertisment

அந்தவகையில், 15.12.2023 முதல் 14.01.2024 வரை முதல் மாதம், 15.01.2024 முதல் 14.02.2024 வரை இரண்டாவது மாதம், 15.02.2023 முதல் 15.03.2024 வரை மூன்றாவது மாதம் என இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசுப் பொருட்களை வழங்கும். பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.