சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (07.06.203) அன்னை இந்திராகாந்தி பெண்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை உடனே கைது செய்ய வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானதுஅன்னை இந்திரா காந்தி பெண்கள் முன்னேற்ற நலச் சங்கத் தலைவர் கௌரி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை மாநிலத்தலைவர் ரஞ்சன்குமார்,இணையும் கரங்கள் சமூக நலப் பாதுகாப்பு சங்கத் தலைவர் சைதை ஜாய்ஸ், காங்கிரஸ் கமிட்டியின் இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் (படங்கள்)
Advertisment