Published on 01/08/2021 | Edited on 01/08/2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஆகஸ்ட் 9- ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 10 பேர் நேர்முகத் தேர்வுக்கு இறுதி செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 5 பேர், ஐஐடி பேராசிரியர்கள் இருவர் உள்ளிட்ட 10 பேருக்கு நேர்காணல் நடைபெறுகிறது. நேர்காணலின் முடிவில் தகுதியான மூன்று பேரை இறுதிச் செய்து அவர்களின் பெயரை ஆளுநரிடம் தேடல் குழு வழங்கும். தேடல் குழு அளித்த பட்டியலில் இருந்து துணைவேந்தராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.