அண்மைக்காலமாக நடிகர் அஜித் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் தக்க்ஷா என்ற மாணவ தொழில்நுட்ப குழுவின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அந்த குழுவினருடன் சேர்ந்து ஏற்கனவே சிறிய ரக விமானங்கள் போன்றவை உருவாக்கி சாதனை படைத்தது வந்த நிலையில் அஜித்தின் தக்க்ஷா குழுவினரால் வடிவமைக்கப்பட்ட 60 முதல் 80 கிலோ வரை எடையுள்ள பொருட்களை தாங்கும் திறன் உள்ள ஏர்டாக்ஸி நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இரண்டு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஏர் டாக்சியில் பயணித்தால் கூகுள் மேப் போலவே நாம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை கொடுத்துவிட்டால் அந்த திசைக்கு அழைத்துச் செல்லும் இந்த டாக்ஸியில் 45 நிமிடங்கள் தொடர்ந்து பயணிக்க முடியும் என்றும் அக்குழு கூறியிருந்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான ஆய்வு மையம் அமைப்பு நடிகர் அஜித்திற்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வரும் காலங்களில் விரும்பினால் மீண்டும் ஆலோசகராக கவுரவ பணியில் பணியாற்ற வேண்டும் என்று அக்குழு அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.