Skip to main content

“அண்ணாவையும் படிக்க வேண்டும்” - இயக்குநர் வெற்றிமாறன் 

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

"Anna should be read too" - Director Vetrimaran

 

நடிகர் விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று (17ம் தேதி) தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  

 

இந்த கல்வி விருது விழாவில் பேசிய அவர், “உங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி நீங்க படிக்க வேண்டும். சமீப காலமாக எனக்கும் படிக்கும் ஆர்வம் வந்திருக்கு. முடிந்த வரைக்கும் படியுங்கள். எல்லா தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் படிங்க. நல்ல நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கங்க” என்று பேசினார். மேலும், “சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அதில் வரும் அழகான வசனம், 'காடு இருந்தா எடுத்துக்குவானுங்க... ரூபாய் இருந்தா புடிங்கிடுவாங்க... ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் பட வசனத்தையும் பேசி படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

 

இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவில் நாம் சொல்லும் ஒரு விஷயம், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவரை அது சென்றடையும்போதும் அதனுடைய நேர்மறையான தாக்கம் என்ன என்பதின் எடுத்துக்காட்டாகத் தான் பார்க்கிறேன். நாம் நமது வரலாற்றை தெரிந்துகொள்ள அம்பேத்கர், பெரியார், காமராஜருடன், அண்ணாவையும் படிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான்” - பாரிவேந்தர் 

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Vijay entering politics is good says parivendhar

 

விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான் ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் வருவதை விட, புதியவர்கள் வருகையால் மக்களுக்கு நல்லது நடக்கும் என ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

கரூர் மாநகரில் இந்திய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சித்ரா என்பவரின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். விழாவை முடித்துக் கொண்டு புறப்பட்ட அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு, “விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான். மக்கள் நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பதவியில் இருந்தவர்களே வருவதை விடவும், நல்லவர்கள், சாமர்த்தியமானவர்கள், தேசப்பற்றுடன் இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும்” என்று பதிலளித்தார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

விஜய்க்கு இதைத் தான் சொல்லிக் கொடுத்தேன் - ரகசியம் பகிர்ந்த எஸ்.ஏ. சந்திரசேகர்

 

sa chandrasekar about vijay

 

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது. அதில் பேசிய அவர், “நான் என்ன சாதனை செய்தேன் எனத் தெரியவில்லை. இதுவரை 70 படங்களை இயக்கியிருக்கேன். விஜயகாந்த், ரஹ்மான், பிரியங்கா சோப்ரா, சிம்ரன் போன்றவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இயக்குநர் ஷங்கர் என்னிடமிருந்து போனவர். இதெல்லாம் சாதனையா. 

 

என்னை அறிமுகப்படுத்திய போது எங்கள் தளபதி விஜய்யின் அப்பா எனச் சொன்னார்கள். எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. என்னை ஒரு மனிதனாக மாற்றியது என் மனைவி. இந்த சாதனைக்கு என் மனைவிக்கு சாதனையாளர் விருது கொடுக்க வேண்டும். நான் இயக்கிய 70 படங்களில் 40 படம் 100 நாள் ஓடியிருக்கும். ஆனால் என் மனைவி, நண்பர்கள் என ஒரே ஒரு படம் தான் டைரக்ட் பண்ணினாங்க. அந்த படம் சில்வர் ஜூப்லி வாங்கினுச்சு. அப்போ என்னை விட அவுங்க தான பெரிய டைரக்டர்.  அதை விட உங்கள் தளபதி விஜய்யை தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்காங்க. இவ்வளவு பெருமைக்குரிய ஆளை வைத்துக் கொண்டு எனக்கு கொடுப்பது நியாயமா. அதனால் அவுங்களுக்கு கொடுத்திருங்க. 

 

இன்னொருத்தர் வீட்டில் இருக்கார். விஜய். இன்றைக்கு அவரின் அப்பா என்று தான் என்னை சொல்றாங்க. 1991-ல் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான மேடையை நான் அமைத்துக் கொடுத்தேன். அந்த மேடையில் ஃபெர்பாம் செய்து உங்களை ரசிகர்களாக மாற்றியது விஜய். ஒரு சின்ன புள்ளி வைத்தேன். அதை அழகாக கோலமாக மாற்றி வருகிறார்.  அவருக்கு கடுமையான உழைப்பு, நேரம் தவறாமை, சினிமா துறை ரொம்ப போட்டியான துறை, கொஞ்ச மிஸ் பண்ணினால் கூட இன்னொருத்தர் வந்துவிடுவாங்க. ஜாக்கிறதை... இதைத் தான் அவருக்கு சொல்லிக் கொடுத்தேன். இதையெல்லாம் அவர் மனதில் வைத்துக் கொண்டு உழைச்சு உழைச்சு முன்னேறியிருக்கார். 

 

இன்றைக்கு அவர் உட்கார்ந்திருக்கிற இடம், கடவுள் கொடுத்தது. உழைச்சதினால் கடவுள் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் தாய்மார்கள் மனதில் பிள்ளையா உட்காந்திருக்கார். இளைஞர்கள் மத்தியில் அண்ணன், தம்பியா உட்கார்ந்திருக்கார். இன்னொரு பெருமையான விஷயம் நான் எங்கே போனாலும் அப்பா என கூப்பிடுறாங்க. ரசிகர்களின் அப்பாவை அப்பா என அவர்கள் கூப்பிட்டதே கிடையாது. என்னைத் தவிர. இவ்வளவு பெருமையைக் கொடுத்த சாதனையாளரை விட்டுவிட்டு எனக்கு எதற்கு இந்த பட்டம். பரவாயில்லை இந்த விருதை கொண்டு போய் அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன்” என்றார்.