தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/01/2022) தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்த்தூவியும் மரியாதைச் செலுத்தினர். அத்துடன் தாயார் தயாளு அம்மாளிடம் முதலமைச்சர் குடும்பத்துடன் ஆசிப் பெற்றார்.

Advertisment

இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.