![Anger at not getting money ... the person who broke the ATM machine with a stone!](http://image.nakkheeran.in/cdn/farfuture/mTNl3uRfpOYq9qbWd8ypzwp_GhzFkakKOw5GSLbz-hQ/1632369582/sites/default/files/inline-images/atm_9.jpg)
ஏ.டி.எம்மில் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம். மெஷினை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி உடைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்மில் இளைஞர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தும் பணம் வராததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், கல்லைக் கொண்டுவந்து ஏ.டி.எம். இயந்திரத்தை அடித்து நொறுக்க முயன்றார். இந்தக் காட்சிகள் ஏ.டி.எம். மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதன்பிறகு அதே ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் ஏ.டி.எம். இயந்திரம் சேதப்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், கல்லால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்கும் அந்தக் காட்சிகள் கைப்பற்றப்பட்டது. மேலும், ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்திய அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.