Skip to main content

“மீண்டும் இங்கேதான் கட்டுவேன் என்று சீண்டிப் பார்க்காதீர்கள்..” - அன்புமணி

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Anbumani said we will soon announce about the parliamentary election alliance

கடலூர் மாவட்டம் வடலூரில் சர்வதேச மையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சன் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

இதில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நான் இன்று வள்ளலார் சபைக்குச் சென்று குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தேன். 157 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதி மக்கள் இந்த இடத்தை வழங்கினார்கள். ஆனால் தற்போது இதில் சர்வதேச மையம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திமுக கொள்கைக்கும் வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம்? வள்ளலார் கொள்கைக்கு எதிராக கஞ்சா போதைப் பொருட்கள் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல குடும்பங்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளது. இங்கு பெருவழியில் சர்வதேச மையம் அமைக்க 100 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

இதனை சென்னையில் கட்டினால் உலகம் முழுக்க வள்ளலார் புகழ் ஓங்கி நிற்கும்; மீண்டும் இங்கேதான் கட்டுவேன் என்று சீண்டிப் பார்க்காதீர்கள். நீங்கள் நன்றாக இருக்கணும். அப்புறமா நாங்க ஒன்றும் செய்ய முடியாது. இதை இப்படி தான் சொல்ல முடியும்; புரிந்து கொள்ளுங்கள். 40 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணை காக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற கட்சி எல்லாம் தேர்தல் வெற்றிக்காக போராடுவார்கள். நாம்தான் மண்ணையும், மக்களையும் காக்க போராடி வருகிறோம். என்எல்சியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க யாராவது வாய்திறந்தால் சும்மா இருக்க மாட்டோம். 

தற்போது தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் தடை செய்துள்ளீர்கள். பஞ்சுமிட்டாயை விட பல்லாயிரம் மடங்கு போதைகள் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதை ஏன் தடுக்க மாட்டீர்கள். ஏனென்றால் அதன் மூலம் உங்களுக்கு லாபம் வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உங்களுக்கு என்ன பிரச்சனை. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். மூத்த தலைவர் கலைஞர் அவரது நினைவிடத்தை நேற்று தமிழக முதல்வர் திறப்பதில் நான் கலந்து கொள்வதாக இருந்தேன். இந்த கூட்டத்தால் கலந்து கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் வன்னியர்கள் வளர்ச்சி அடைந்ததாக தமிழக சட்டசபையில் தவறான கருத்தை அமைச்சர்கள் கூறுகிறார்கள். இது மோசடி ஏமாற்று வேலை. 

Anbumani said we will soon announce about the parliamentary election alliance

திமுக சமூகநீதி பற்றி பேச தகுதியற்றவர்கள். இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பறவைகள் வருகிறது என கணக்கெடுப்பு நடத்துகிறீர்கள் ஆனால் எத்தனை மனிதர்கள் உள்ளார்கள் என சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் உங்களுக்கு தயக்கம். தமிழகத்தில் இரு கட்சிகளும் தடுப்பணையை கட்ட மாட்டார்கள்; ஏனென்றால் மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதற்காக தான்” என பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு 77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி சர்வதேச மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை கடுமையாக எதிர்த்தாலும் எங்களது நோக்கம் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் உள்ள பெருவெளியில் எந்தக் கட்டுமானங்களும் இருக்கக் கூடாது. வள்ளலாரின் கனவு அப்படியே இருக்க வேண்டும். அதுதான் அவரது எண்ணமும் கூட. வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளிக்கு அருகில் உள்ள இடத்தில் 500 அல்லது 1000 ஏக்கர் இடத்தை எடுத்து அமைக்க வேண்டும். இதனால் வள்ளலார் புகழ் அதிகமாக பரவும். வள்ளலார் வாழ்ந்த இந்த மண்ணை தமிழக அரசு எந்த விதத்திலும் சிதைக்கக் கூடாது. சமீபத்தில் இங்கு தைப்பூசம் நடைபெற்றது. இதில் 10 லட்சத்திற்கு மேல் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு என்னோட பணிவான வேண்டுகோள் இது. மக்களின் 100 சதவீத விருப்பம் இந்த பகுதியில் எந்த ஒரு கட்டுமானமும் இருக்கக் கூடாது. புனிதமான இடம் புனிதமாக இருக்க வேண்டும். மக்களை எதிர்த்தும், மக்கள் கருத்தை எதிர்த்தும் இங்கு சர்வதேச மையம் வரக்கூடாது.

பாராளுமன்றத்தேர்தலில் பாமக நிலைப்பாடு தொடர்பாக தினமும் செய்திகள் வெளிவருகின்றது. அத்தனை செய்திகளும் பொய்யானவை, வதந்திகள். ஊடகம் ஒரு புனிதமான துறை; அதனை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஓரிரு வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி முடிவுகள் வெளியாகும். எங்களை பற்றி செய்தி திரித்து வெளியிடாதீர்கள் உங்களுடைய அவசரத்திற்கு எங்களால் செயல்படமுடியாது. புகழ்பெற்ற ஊடகங்களும் இதில் அடங்கும். ஊடகத்திற்கு என்ன அவசரம். கூட்டணி என்பது திடீரென முடிவாவது அல்ல..அது பல கட்சிகளை சார்ந்தது ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.