Skip to main content

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கல்; 12 பேர் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Ambush with deadly weapons; 12 people arrested

ஆஜராக இருந்த நபரை கொலை செய்ய பதுங்கி இருந்த 12 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த பங்களாவில் சுமார் 6 பேர்கள் கொண்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொலையை நிகழ்த்துவதற்காக மேலும் 6 பேர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருப்பதும் தெரிய வந்து, அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக 12 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் நண்பனின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தவர்களைக் கொலை செய்யப் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தவர்களைக் கொலை செய்வதற்காக ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்து பின்னர் போலீசில் பிடிபட்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
kallakurichu issue; The main culprit arrested!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 3 பேர் செயற்கை சுவாச சிகிச்சையிலிருந்து மீண்டு நலம் பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். கண் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்காணிக்கத் தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார். 

kallakurichu issue; The main culprit arrested!

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. மாதேஷிடம் இருந்து மெத்தனால் வாங்கிய சின்னத்துரை அதனை கோவிந்த ராஜுக்கு விற்பனை செய்துள்ளார். அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசஃப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர்; திருமண ஊர்வலத்தில் கொடூரச் செயல்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Atrocity in wedding procession in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் மதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாமா கவுதம் (24). இந்த இளைஞருக்கு அம்மாவட்டத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. அதன்படி, துலாபூர் பகதூரன் என்ற கிராமத்தில் அவர்கள் இருவருக்கும் திருமண விழா நடைபெற்றது.

அந்த விழாவையொட்டி, மணமகன் சுதாமா கவுதம், குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அங்கு வந்தவர்கள், இளைஞர் சுதாமா கவுதம் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆசிட் ஊற்றியதில், சுதாமா கவுதமும், அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மணமகன் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், சுதாமா மீது ஆசிட் ஊற்றி தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, தப்பிச் சென்ற 3 நபர்களையும் போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 3 பேரில் ஒருவரான சச்சின் பிண்ட் (23) என்ற வாலிபர், சுதாமாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த சச்சின், இந்தத் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மணமகன் மீது ஆசிட் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.