Skip to main content

‘இந்த ஆட்டம் போதுமா...’ - மைதானத்தை மிரள வைத்த பெண் காவலர்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

amazing female policeman playing cricket in Coimbatore

 

"இந்த அடி போதுமா.. இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?" என கோவையில் கிரிக்கெட் ஆடிய பெண் காவலர்களின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதை நினைவுகூறும் விதமாக கோவை மாநகர், தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்காக பிரத்தியேகமாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டுள்ளது. 

 

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் பெண் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான Yellow Warriors என்ற அணியும், பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters என்ற அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற Yellow Warriors அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய Blue Fighters அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கியது. இதையடுத்து, ஒரு விக்கெட்டை இழந்த Blue Fighters அணி 3.3 ஓவர்களிலேயே 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

 

அதுமட்டுமின்றி அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற Blue Fighters அணிக்கு கோவை சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி கௌரவப்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் காவலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்