Skip to main content

“அனைத்து குளங்களுக்கும் மழைநீர் வரும்படி வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்படும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
All ponds will be provided with rainwater drainage facilities  says I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சியில் என்.ஆர்.ஜி.இ.எஸ். மற்றும் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சில்வார்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடம் மற்றும் அப்பனம்பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. 

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவரும், தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சிவகுருசாமி, கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபானி, ஆத்தூர் நடராஜன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி ராமமூர்த்தி வரவேற்றார்.

இதில் சில்வார்பட்டி ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்துவிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தீர்வு வழங்கிய பின்பு அவர்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் சில்வார்பட்டி கிராமம் எப்போதும் எனக்கு ஆதரவு தரும் கிராமமாகும். 1989ம் ஆண்டு முதல் இன்று வரை 34 ஆண்டுகளாக எனக்கு நீங்கள் ஆதரவு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பகுதி மக்கள் குளங்களை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் குளங்களுக்கு நீர்வரத்து பாதைகளை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்துள்ளீர்கள். 

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மட்டுமின்றி ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மழை தண்ணீர் வரும்படி சிமெண்ட் வாய்க்கால் அமைத்து கொடுக்கப்படும். ஏற்கனவே இது குறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் வடக்குப் பகுதி விவசாயிகளின் நலன் காத்து என்றும் அவர்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

இந்த ஊராட்சியை பொறுத்தவரை தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். கிராமங்கள் தோறும் புதிய நாடக மேடைகள், புதிய அங்கன்வாடி மையங்கள், அனைத்து கிராமங்களுக்கும் தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் புதிய தார்ச் சாலைகள் உட்படப் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டிக் கொடுக்கப்படுவதோடு காவிரி கூட்டுக் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.