பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை ஏப்ரல் இறுதியில் தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வந்ததால், முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருந்தாலும், வெப்ப அலையின் காரணமாகவும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டிய பள்ளி ஜூன் 10 ஆம் தேதிக்குத் தள்ளிப்போனது.
இந்த நிலையில்தான் திறப்பு விடுமுறை அளிக்கப்பட்ட தொடர்ந்து அதனை ஈடுசெய்யும் வகையில், நடப்பு ஆண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் நாளை(13.7.2024) அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ஏற்று, நாளை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது.