Alert for 13 districts in next 3 hours

ஏழு மணி வரை 13 மாவட்டங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மணலி, திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஏழு மணி வரை 13 மாவட்டங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராணிப்பேட்டை, நாமக்கல் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு ஏழு மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.