ரகத

சென்னையில் அனுமதியின்றி மது விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

சென்னை திருமங்கலத்தை அடுத்த விஆர் மாலில் மதுவுடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்ச்சி நேற்று இரவு நடத்தப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி வாங்காமல் மது விருந்து நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். சில ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்தது.

Advertisment

அனுமதி பெறாததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். அத்துடன், அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் விலை உயர்ந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே மது போதையில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து பலியானார். இதனால் அதிர்ச்சியான காவல்துறையினர் மது விருந்தில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்று கோணத்தில் விசாரணை செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாநகர காவல்துறை, " சென்னை மாநகரத்தில் காவல்துறை அனுமதி இல்லாமல் மது விருந்து உள்ளிட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது.