Published on 06/05/2020 | Edited on 06/05/2020
![alcohol based sanitizer export issue - Central government announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/XsJzxYpFO_f5QKWsiz5fQGJecOUxl-O9nmClMgztdTY/1588776684/sites/default/files/inline-images/111111_346.jpg)
உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ், இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது மட்டுமே கரோனா பரவை தடுப்பதற்கான சிறந்த விழி என்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது. இதை கவனத்தில் வைத்து மத்திய அரசு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருகிறது. இந்நிலையில் கைகளை சுத்தப்படுத்தும்போது கரோனா வைரஸை அழிக்கும் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் சானிடைசரை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.