நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த அடக்குமுறை கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த கைது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் புனே செல்லுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினரால் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரிடம் என்ன குற்றத் திற்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
நக்கீரன் கோபால் அவர்களின் கைதினைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு விரைந்தார். வழக்குரைஞர் என்ற முறையில் நக்கீரன் கோபால் அவர்களை சந்திக்கவேண்டும் என்று வைகோ கூறியதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.வேறு வழியின்றி வைகோ காவல் நிலையத்திலேயே அமர்ந்து மறியல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடக்கின்ற நடவடிக்கைகளைப் பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா? பத்திரிகையாளர்களையும், கருத்துக் கூறக் கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக் கப்படாதவையாகும்.
இத்தகு செயல்பாடுகள், அரசின்மீது பொது மக்களிடத்தில் கடுமையான அதிருப்தி ஏற்படும் என்பதைக்கூடக் கணக்கில் கொள்ளவில்லையா? ஒருக் கால் இதற்குமேல் புதிதாக அதிருப்தி கொள்வதற்கு என்ன இருக்கிறது என்ற முடிவுக்கு அ.தி.மு.க. அரசு வந்துவிட்டதா?
அண்ணா பெயரில் உள்ளஆட் சிக்கு இதுஅழகல்ல;கைதுசெய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவேண் டும் என்று வலியுறுத்துகிறோம் எனக்கூறியுள்ளார்.