Published on 02/08/2018 | Edited on 02/08/2018

நடிகர்கள் அஜீத், அர்ஜூன் ஆகியோரை வைத்து இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் சென்னையில் உயிரிழந்துள்ளார். அழுகிய நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே உடல் அழுகி இருந்ததாக தகவல்.
அஜீத் நடித்த ‘ரெட்டை ஜடை வயசு’, அர்ஜூன் நடித்த ‘ஆயுதபூஜை’ ஆகிய படங்களை இயக்கிய சிவக்குமார் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர். பாக்யராஜிடம் உதவியாளராக பணியாற்றிவிட்டு இயக்குநர் ஆனவர்.