
சென்னையில் பல இடங்களில் ஏர்டெல் தொடர்பு சேவை தடைபட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் ஏர்டெல் சேவைகள் திடீரென முடக்கமானது.
தொலைப்பேசி சேவை மட்டுமல்லாது இணையச் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். அதேபோல் ஏர்டெல் இணைய சேவையை பயன்படுத்தி ஜி-பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினர். கரோனா நேரத்தில் வீட்டில் இருந்தவாறு பணியாற்றும் ஊழியர்கள் பணியை தொடர முடியாமலும், அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள முடியாமலும் அவதிக்குள்ளாகினர்.