air corridor; Inaugurated by the Chief Minister

சென்னை தியாகராய நகரில் 28.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதில் முதலமைச்சர் சிறிது தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடன் மேயர் பிரியா மற்றும்அரசு உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisment

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கக்கூடிய வகையில் இந்த ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 570 மீட்டர் தொலைவிற்கு 4 மீட்டர் அகலத்திற்கு இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும்நகரும் படிக்கட்டுகளும் கூடுதல் சிறப்பாக வைக்கப்பட்டுள்ளது. இரு இடங்களில் குடிநீர் அருந்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Advertisment