புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, ஆலங்குடி பாத்தம்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்பொழுது பா.ஜ.க விடம் அதிமுக போல் அடிமையாக இருக்காமல் சுயமரியாதையுடன் திராவிடம் போல வாழ வேண்டும் என்று பேசி வாழ்த்தினார்.
தொடர்ந்து அவருக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய எய்ம்ஸ் செங்கலை மாடலாக கொண்டு 'உண்மையின் உரைகல்' என்ற தலைப்பில் எய்ம்ஸ் செங்கல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.