/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aictes444.jpg)
2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகலந்தாய்வு குறித்து அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் உத்தரவிட்டு, அதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், "ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வையும், செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க வேண்டும். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். இயல்பு நிலைத் திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது. பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இணைய வசதி வழங்க வேண்டும். உத்தரவை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)