Skip to main content

நேற்று அன்வர் ராஜா நீக்கம்... இன்று அதிமுக செயற்குழு கூட்டம் - புதிய அவைத்தலைவர் இவரா?

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

கதச

 

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி, பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஒருவர்,  அன்வர் ராஜாவைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த கூட்டத்தில் டிசம்பர் முதல் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. 

 

இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய அவைத்தலைவர், உட்கட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சசிகலா இணைப்பு பற்றி தொலைக்காட்சிகளில் தொடர்ந்து கூறி வந்த அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா நள்ளிரவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் சசிகலா தொடர்பாக யாரும் பேசக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும் கட்சியின் அவைத்தலைவராக செங்கோட்டையன் வர அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்