AIADMK announces relief to student family

மேட்டூர் அருகே, கடைசி வாய்ப்பிலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மருத்துவர் ஆகும் கனவு கானல் நீராகி விடுமோ என்ற மன அழுத்தத்தால், விவசாயியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவகுமார். விவசாயி. இவருடைய மகன் தனுஷ் (வயது 19). மேட்டூரில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் கடந்த 2019- ஆம் ஆண்டு பிளஸ்2 முடித்தார்.கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தோல்வி அடைந்திருந்தார். அதனால் ஏமாற்றம் அடைந்த தனுஷ், மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பாக நடக்கும் நீட் தேர்வுக்காகக்கடுமையாக படித்து வந்தார். இந்நிலையில் நீட் தேர்வு நடைபெற்றநாளான நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

 AIADMK announces relief to student family

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களையும்,இரங்கல்களையும்தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் தனுஷின்குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அதிமுகதலைமை அறிவித்துள்ளது.இதுதொடர்பாகஅறிக்கை வெளியிட்டுள்ளஅதிமுகவின்தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர், ''உயிரிழந்த மாணவர் தனுஷின்குடுப்பதிற்குஅரசு 1 கோடி ரூபாய் நிதியுதவியும்அரசு பணியும் வழங்கவேண்டும். எந்த துயரம் வந்தாலும் மாணவர்கள் போராட்ட குணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். பெற்றோர்களுக்குக் காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை மாணவர்கள் வழங்கிவிடக்கூடாது. மாணவர்தனுஷின்குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்'' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.