Published on 08/08/2022 | Edited on 08/08/2022
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11- ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் வாதங்களை முன் வைக்க மூத்த வழக்கறிஞர்கள் டெல்லியில் இருந்து வரவேண்டியிருப்பதால், விசாரணையை ஒத்திவைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரப்பட்டது. இதையேற்று கொண்டு நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.