Admitted to Senthil Balaji Hospital

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

Advertisment

இந்த வழக்கு தொடர்பான பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் செந்தில் பாலாஜி தரப்பு முதன்மை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என நீதிமன்றங்களில் பலமுறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து ஜாமீன் பெற முயன்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அங்கிருந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட ஆரம்ப காலத்திலேயே இதயக் கோளாறு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.