Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை; இணையதளம் தொடக்கம் 

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

Admission to Annamalai University; Website launch

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தினை மே 11 ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி  பிரகாஷ், புலமுதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், மாணவர் சேர்க்கை பிரிவின் துணை இயக்குநர் பாலபாஸ்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், துணைவேந்தருக்கான நேர்முக செயலா் பாக்கியராஜ் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும், பாடப்பிரிவுகள் மற்றும் விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.06.2023 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

 Star status for Annamalai University

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கல்வித்துறை (3.5) நட்சத்திர மதிப்பீட்டை, 70.81 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

 

இது முந்தைய ஆண்டு பெற்ற (0.5) நட்சத்திர மதிப்பீட்டில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் இந்த மதிப்பெண்ணை எட்டுவது இதுவே முதல்முறை.  இதன்படி தமிழ்நாட்டின் 2வது அதிக புதுமை கண்டுபிடிப்பு செயல்திறன் மிக்க அரசு பல்கலைக்கழகமாக மாறி உள்ளது.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் ஐஐசி அமைப்பு புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இது அமைந்துள்ளது. ஆராய்ச்சி அறிஞர்கள் மாணவர்களிடையே புதுமையான ஆராய்ச்சி சிந்தனை, தொழில் முனைவு, திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஐஐசியின் செயல்பாடுகள் அதிகரித்தன.

 

மேலும் சிதம்பரம் பகுதியில் பள்ளிகளின் அடல் ஆய்வகங்களின் ஒருங்கிணைப்பு மூலம் சேவைகளை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சியானது தமிழகம் முழுவதும் புதிய முயற்சி, தொழில் முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாதனை படைத்த ஐஐசி குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களுக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

vck sruggle against Annamalai University


சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ்மொழி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.  மாவட்ட செயலாளர் மணவாளன் அனைவரையும் வரவேற்றார்.

 

கடலூர் மாநகர் மன்ற துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி, நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் செல்லப்பன், மண்டல துணை செயலாளர் ஐயாயிரம்,  மாவட்ட செயலாளர்கள் நீதி வள்ளல், அறிவுடை நம்பி, செந்தில், திராவிட மணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் 2 விழுக்காடுகள் மட்டுமே உள்ளனர்.  சமூகநீதி என்ற கொள்கையின் செயல் வடிவமே இட ஒதுக்கீடு, இந்த இட ஒதுக்கீட்டை புதை குழியில் போடுவதை எதுவரை சகிக்க முடியும்.  சில தளங்களில் நிர்வாக தலைமையின் சிறிய ஆளுமை வெளிப்படுகிறது.  சில தளங்களில் கண்டும் காணாத பொறுப்பற்ற போக்கு தொடர்கிறது.

 

அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுப்பாட்டிற்கு எடுத்த போது நிதிச் சிக்கலை மட்டுமே கணக்கிட்டுள்ளனர். ஆனால் அதில் இட ஒதுக்கீட்டை கருதவில்லை. இதனால் கடைசியாக பணியில் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் தற்போது 2 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரம் கேட்டும் இதுவரை தரவில்லை. அதேபோல் 10 ஆண்டுகளாக நிலவையில் உள்ள 205 தொகுப்பு ஊதிய பணியாளர்களையும் என் எம் ஆர் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வு ஊதிய ஒப்படைப்பு தொகை, பணிக்கொடை,7-வது ஊதிய குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க ஆவண செய்ய வேண்டும்.

 

எஸ்சி, எஸ்டி, எம்பிசி காலி பணியிடங்களை உடனே நிரப்பிட ஆவண செய்ய வேண்டும்.  நிர்வாகம் இட ஒதுக்கீட்டை செம்மைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சிறப்பு ஆட்சி மன்ற குழுவை கூட்டி மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து பல்கலைக்கழகத்தை மீண்டும் சீர்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.