திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட கல்வெட்டில் தமிழக வெற்றிக்கழக கட்சி பொறுப்பு நிர்வாகிகள் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் இடமழை தலைமை வைத்தார். வத்தலகுண் டு ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சத்யநாராயணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் தேவா கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் கருப்பு, மருதுபாண்டி, பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்
இந்நிலையில், கொடியேற்று விழா தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு திரண்ட த.வெ.க நிர்வாகிகள் ஏற்கனவே தங்களுக்கு பொறுப்பு வழங்கிவிட்டு தற்போது கட்சியில் பணம் பெற்றுக் கொண்டு புதியவர்களுக்கு பொறுப்பை வழங்கி விட்டதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வந்த கட்சியின் மாவட்ட தலைவர் தேவாவை கண்டித்து, அபினேஷ் தனசேகரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு வந்து கோஷங்களை எழுப்பினர். 2023 ஆண்டு தங்களுக்கு பொறுப்புகளை வழங்கியதாகவும் தற்போது பணம் வாங்கிக்கொண்டு புதியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர். உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லாமல் பணம் கொடுப்பவர்களுக்கு பதவி கொடுக்கும் கட்சி நிர்வாகிகளால் தமிழக முதல்வராகும் விஜய்யின் கனவு எப்படி நிறைவேறும்? என்று கேள்வி எழுப்பினர். த.வெ.க தொண்டர்கள் இரண்டு பிரிவாக நின்று வாழ்க, ஒழிக கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.