dmk

தமிழக அமைச்சரவையில் இலாகா அளவில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி ஆளுநர் மாளிகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

இதனால் வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில் வாரிய துறையும் கூடுதலாக கவனிப்பார் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டுமே கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின் படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவையில் இலாகா அளவில் சிறிய மாற்றம்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment