jl

தமிழகத்தில் நாளை (20.04.2021) முதல் அமல்படுத்தப்படும் இரவுநேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பகல் நேரத்தில் கூட பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருப்பதால், பகல் நேரங்களில் பேருந்துகளில் செல்பவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், பொதுமக்களுக்கு இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.