Skip to main content

கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி!-அரசாணை வெளியீடு!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

 Additional Admission to Arts and Science Colleges-Government Release!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். அத்துடன், புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

 

கடந்த 26 ஆம் தேதி சட்டமன்றத்தில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் 2021 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலை பாடப்பிரிவுகளில் 25 சதவிகிதம் கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிவியல் பாடப்பிரிவுகளில் கல்லூரி ஆய்வக வசதிக்கு ஏற்ப கூடுதலாக 25 சதவிகித சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 145 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை அதிகரிக்கும் நிலை உருவாகும். இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்குப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதிபெற வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அவர் தமிழக நலனையே புறக்கணிக்கிறார்'- தமிழிசை கருத்து

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'He is neglecting the welfare of Tamil Nadu' - Tamilisai opinion

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் பல கோரிக்கைகளை எடுத்து வைத்திருந்தேன். நிதிநிலை அறிக்கையில் இதுவெல்லாம் இடம்பெற வேண்டும்; இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கைகளை வைத்திருந்தேன். மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்க கூடிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்; கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் இப்படி சில கோரிக்கைகளை நான் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் எதையுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

'He is neglecting the welfare of Tamil Nadu' - Tamilisai opinion

மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக்கிய ஒரு சில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான் என்னைப்  பொறுத்தவரை. எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்று அறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழகத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறேன். அதை நான் புறக்கணிக்க போகிறேன். நாளை திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவார்கள்'' என்றார்.

nn

இந்நிலையில் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதை தமிழிசை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் முதல்வர் தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் புறக்கணிப்பது என்பது மக்கள் நலனையே ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் செயலாகும்.நேரில் சந்தித்து விவாதித்து தேவையானதை தமிழக முதல்வர் பெற வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதேபோல் 2024 மத்திய பட்ஜெட் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஆந்திரா பீகாருக்கு பட்ஜெட்; மற்ற மாநிலங்களுக்கு அல்வா' என விமர்சித்துள்ளார்.

Next Story

'மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவே காரணம்'- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'The AIADMK is the reason for the increase in electricity tariff' - Minister Thangam Tennarasu interview


மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவே காரணம் எனத் தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''ஜெயலலிதா இருந்தவரை உதய் மின் திட்டத்தில் இணைவதற்கு எதிர்ப்பு இருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அன்றைய தினம் அமைச்சராக இருந்த பியூஸ்கொயல் சென்னைக்கு வந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு தனி மாநிலமாக இருக்கிறது. இங்க இருக்கக்கூடிய முதலமைச்சரை பார்க்கவே முடியவில்லை. அமைச்சர்களை கேட்டால் அவர்கள் எதையும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லி விமர்சனம் செய்தார்கள். அன்றைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பியூஸ் கோயல் மீது சீறிப்பாய்ந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அன்றைய தினத்தில் பத்திரிகைகளில் பெருவாரியாக வெளியே வந்திருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி உதய் மின் திட்டத்தில் அன்றைய மின்துறை அமைச்சர் கையெழுத்திட்டு தமிழ்நாட்டையும் அதில் இணைத்துக் கொண்டதற்கு பிறகுதான் இந்த மின்சார கட்டணங்கள் என்பது உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் மின்சார உயர்வுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவிக்கும் மிக முக்கியமான ஷரத் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அன்றைய அதிமுக அரசு. ஏன் இந்த மின் கட்டணம் உயர்வு வேண்ட கூடிய சூழ்நிலை வந்தது. இதற்கான சீரழிவுக்கு யாரெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் கடந்த 2011-12 ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது மின்சார வாரியத்திற்கு ஒட்டுமொத்த நிதி இழப்பு 18,954 கோடியாக இருந்தது. பின் நாட்களில் 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் அவர்களின் திறனற்ற நிர்வாகத்தின் காரணமாக இந்த செலவு ஏறத்தாழ 94,313 கோடியாக அதிகரித்து. 2021 இல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 76 கோடி ரூபாயாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகத்தின் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த நிதி இழப்பு இருந்தது.

இதற்கு காரணம் யார்?  ஆனால் பின்னால் வந்த திமுக அரசு இந்த நிதி இழப்பினை 2021-22 இல் இருந்து 100% அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிதியிழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால் டி.என்.இ.பியின் கடன் 43,493 கோடி ரூபாய். இந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து. 2022-ல் கடன் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 723 கோடி ஆகும். இந்த தொடர்ச்சியான இழப்புகளை சரி கட்டுவதற்காக தான் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் ஒரு கோடி வீட்டு இணைப்பு உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. குறைந்த அளவில் தன் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் விலாவாரியாக கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

The website encountered an unexpected error. Please try again later.