Skip to main content

அதானியின் மோசடி விவகாரம்; திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

adani issue reflected in trichy congress 

 

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம்  சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள வங்கிகள் அவருக்கு கொடுத்த கடன்தொகை மொத்தம் 80 ஆயிரம் கோடி ரூபாய் அதில் 21,000 கோடி ரூபாய் கடனாக எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது.

 

இதையடுத்து அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப வசூலிக்க வேண்டும். எல்ஐசி, எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் கடன்களைப் பெற்று மாபெரும் இழப்பை ஏற்படுத்திய அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி நுழைவாயிலில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் திருச்சி காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி காங்கிரஸ் தலைவர் அரவானூர் விச்சு என்ற லெனின் பிரசாத், திருச்சி மாநகர மாவட்ட உறுப்பினர் ரெக்ஸ், மாநகர மாவட்ட பொருளாளர் ராஜா நாசர், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், கஸ்பர் ஜோசப், ஜெரால்டு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்