
ஸ்ரீரெட்டி திருவாய் மலர்வதற்கு முன்பே, பல ஹீரோயின்கள் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்கள். அட்ஜெஸ்ட் பண்ணினால் தான் சான்ஸ் தருவதாக பல டைரக்டர்கள் ப்ரியா இம்சை செய்கிறார்களாம். ஆனால் எனக்கு அந்த அனுபவம் இல்லை” இப்படிச் சொல்லியிருப்பவர்கள் மலையாள நவ்யா நாயர், பத்ம, திவ்யா உண்ணி, பார்வதி மேனன், நம்ம ஊரு ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா, தம்ன்னா ஆகியோரும் "கொடி'’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரனும் சமீபத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
’கபாலி’யில் ரஜினிக்கு ஜோடி போட்ட ராதிகா ஆப்தே, ""பணத்துக்காக ஆரம்பத்துல சில செக்ஸ் படங்களில் நடித்தேன். ஒரு முறை தெலுங்கு படத்தில் நடித்த போது முதுகில் அடிபட்டது. அப்போது அந்தப் படத்தின் ஹீரோ என்னிடம் வந்து, தடவிவிடவான்னு கேட்டாரு. அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன்'' என்றார்.
இப்போது லேட்டஸ்டாக பழைய பாலியல் கதையை எடுத்துவிட்டிருக்கிறார் தனுஸ்ரீ தத்தா. ‘"தீராத விளையாட்டுப் பிள்ளை'’ படத்தில் விஷாலுக்கு ஜோடி போட்டவர். “""2009-ல் ஹார்ன் ஓ.கே. ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நானா படேகர் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். இது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அவருக்கு எதிராக யாரும் வாய் திறக்கவில்லை. தன்னுடன் நடித்த நடிகைகளை அடித்தும் இருக்கிறார் நானா படேகர். அவர் பிரபல நடிகர் என்பதால் யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை. ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள், நானா படேகருக்கு தங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாது” என பொரிந்து தள்ளிவிட்டார் தனுஸ்ரீ தத்தா.