Skip to main content

நடிகை ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Actress Roja was suddenly admitted to the hospital

 

ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார்.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார். இந்நிலையில் ரோஜா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெடித்த சர்ச்சை - விளக்கமளித்த ரோஜா

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
roja temple cleaning staff issue

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா கடந்த 15தேதி நடந்தது. இதில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா தனது கணவர் இயக்குநர் ஆர்.கே செல்வமணியுடன் கலந்து கொண்டார். அப்போது அவரை பார்த்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் இரண்டு பெண் தூய்மை பணியாளர்கள், ரோஜாவுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது ரோஜா அவர்களை தள்ளி நிற்க்கும்படி சொல்லியுள்ளதாக கூறப்பட்ய்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, ரோஜா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதாவது தூய்மை பணியாளர்களை அவமதித்து விட்டதாக கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தன் மீதான எழுந்த விமர்சனத்துக்கு ரோஜா தற்போது விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “நான் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். யாரையும் தடுக்கவில்லை. துப்புரவு தொழிலாளர்கள் ஓடி வந்ததால் விழுந்து விடப்போகிறார்கள் என்று கருதி மெதுவாக வாங்க என்று மட்டும்தான் கைகாட்டி பேசினேன். அவர்களை நான் தொடக்கூடாது அல்லது தள்ளி நில்லுங்கள் என்று சொல்லவில்லை. இதைத் தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்குமரியாதை இருக்கிறது. என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அத்வானி!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Advani returned home from the hospital

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்தனர். இந்நிலையில் அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று (04.07.2024) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.