Published on 26/01/2019 | Edited on 26/01/2019
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடக்கிறது. தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா, சிவன் ஸ்ரீநிவாசன், ரவிவர்மா, போஸ்வெங்கட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சென்னை விருகம்பாக்கம் ஏ.கே.ஆர். மஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. லியாகத் அலிகான், தம்பிதுரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துகிறார்கள்.
பொருளாளர், துணைத்தலைவர், இணை செயலாளர், செயலாளர் மற்றும் 14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். சங்கத்தின் தலைவராக இருந்த சிவன் ஸ்ரீநிவாசன் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது.