
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்துவந்த பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா அவரது வீட்டில் காலமானார். இயக்குநர் கே. பாலச்சந்தரால், ருத்ரய்யா இயக்கிய, 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்சித்ரா. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் 'சேரன் பாண்டியன்' படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாகவும் நடித்திருந்தார். நல்லெண்ணெய்விளம்பரத்தில் நடித்துப் பிரபலமானவர் என்பதால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்ட இவர், சென்னை சாலிகிராமத்தில் வசித்துவந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)