Published on 06/04/2021 | Edited on 06/04/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் காலை வாக்குப் பதிவு துங்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாக நடிகர் அஜித் தனது மனைவியுடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்தார். அவர் வந்ததை கண்ட அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விஜயை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தனது வாக்கை செலுத்தினார்.