Published on 09/10/2020 | Edited on 09/10/2020

நடிகர் சூரி புகாரின் பேரில் தந்தை ரமேஷ் குடவாலா மீது வழக்கு பதிவான நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில். “உண்மையில் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்க்கு சூரி தான் ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர வேண்டும். ‘கவரிமான் பரம்பரை’ படத்துக்காக 2017- ஆம் ஆண்டு நடிகர் சூரிக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. என் மீதும், தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. சட்டம், நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் அனுமதிக்கும் பாதையில் நாங்கள் செல்வோம். எல்லாம் தெளிவான பின் சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.