Published on 09/03/2020 | Edited on 09/03/2020
நடிகர் ரஜினிகாந்தை இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் டாக்டர்.செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார்.
கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் கட்சி குறித்தும், கட்சி கொடி குறித்தும் ஆலோசனை செய்தார். மேலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் டாக்டர்.செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.