Skip to main content

சர்ச்சைக்குள்ளான நடிகர் பிரித்விராஜ் ட்வீட்... போராட்டத்தில் இறங்கிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன் மூலம் அணையின் நீர் மட்டமும் 140 அடியை நெருங்கிக்கொண்டு வருகிறது. அதைக் கண்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, அணையின் நீர் உயர்ந்துவருவதால் அதிகபட்சமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று கடிதமும் எழுதியிருக்கிறார். இந்தநிலையில்தான் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரான பிருத்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

 

அதாவது 125 ஆண்டுகளுக்கு மேலான பழமையான முல்லைப் பெரியாறு அணை இருந்துவருவதால் அதை உடைக்க வேண்டுமே தவிர, ஆய்வு பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றொரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதைக் கண்ட கேரளாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் ஜெயராம், திலீப் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் சார்பாகவும் நடிகர் பிரித்விராஜ்க்கு ஆதரவாக முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும் என்று ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுசெய்தனர். அதுபோல் தமிழ் நடிகரான விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கேரளா ரசிகர்களும் முல்லை பெரியாரை இடிக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

இது இந்திய அளவில் வைரலாக பரவி முல்லைப் பெரியாறுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பரவிவருகின்றன. அதேபோல், கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சு மலையாளிகள் மத்தியில் பரவலாகவே இருந்துவருகிறது. கேரள முன்னணி நடிகரான பிரித்விராஜின் இந்தச் செயலால் கேரளாவிலுள்ள பிரபல நடிகர்களின் ரசிகர்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்துவருவதைக் கண்டு தேனி மாவட்ட மக்கள் உட்பட தமிழ்நாடு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் என பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில்தான் அகில இந்திய ஃபார்வர்ட் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் பிரித்விராஜ் உருவ பொம்மையை எரித்து கண்டன குரல் எழுப்பினர். அது மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை நிறுத்துவோம் என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நடிகர் பிருத்விராஜை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அதோடு அணைக்குத் தமிழ்நாடு போலீஸ் அல்லது மத்திய போலீசை பாதுகாப்பு பணியில் போட வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கிறார்கள்.

 

Controversial actor Prithviraj tweets, Politicians and public who involved the struggle!

 

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகிவருகிறார்கள். கேரளாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்ததைக் கண்டு தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவுசெய்து, ‘முல்லை பெரியாறு அணையை தொடர்ந்து பாதுகாப்போமே தவிர அணையை இடிக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதோடு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் உட்பட தென்மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.