Skip to main content

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இசை மழையில் நனையத் தயாரா?; ராயன் படத்தின் அப்டேட் வெளியீடு!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Rayan movie audio launch update release!

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. 

மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட்டை படத்தயாரிப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 6ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட இருக்கிறது. இந்த விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் நேரம் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Next Story

சர்வதேச விருதை வென்ற தனுஷ் படம்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Dhanush's film won an international award

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இதற்கிடையில், இந்தப் படம் லண்டனில் நடைபெற்ற பிரஸ்டீஜியஸ் (Prestigious) நேஷனல் பிலிம் அவார்டில் பெஸ்ட் ஃபாரின் லேங்குவேன் ஃபிலிம் 2024 எனும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்தியை, தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தப் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த பாக்ஸாக் என்ற திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. அதோடு உலகில் உள்ள முக்கிய படங்களும் இந்தப் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பெஸ்ட் ஃபாரின் லாங்குவேஜ் (Best foreign language) 2024 என்கிற விருதை தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமா சர்வதேச அளவில் வெற்றி பெற்றிருப்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.