Skip to main content

நடிகர் மற்றும் இயக்குநர் மாரிமுத்துவின் இறுதி அஞ்சலி (படங்கள்)

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

 

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் ‘குணசேகரன்’ கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகர் மர்ம மரணம்; காருக்குள் சடலமாக மீட்பு

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

kerala Famous Actor Mysterious lost his life and Rescue in a car

 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மலையாள நடிகர் வினோத் தாமஸ் (45). இவர் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும், ஹேப்பி வெட்டிங், வாசி, நதொலி ஒரு செறிய மீனலா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில், நேற்று (18-11-23) இரவு இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், பம்படி பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் வளாகத்தில் நேற்று வெகு நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதில் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், அந்த கார் நின்று கொண்டிருந்த இடத்தை பார்த்தனர். அப்போது, அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் பூட்டப்பட்டு இருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரியவந்தது. உடனே, அவர்கள் அந்த கார் கண்ணாடியை தட்டி பார்த்த போது உள்ளிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், அந்த கார் கண்ணாடியை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு காருக்குள் நடிகர் வினோத் தாமஸ் இருந்ததை பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர் உணர்வற்ற நிலையில் இருந்ததால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் நடிகர் ஒருவர் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம் 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Actor Dhanush's son fined

 

பிரபல நடிகர் தனுஷின் மகன் வாகன விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

 

பிரபல நடிகர் தனுஷின் மூத்த மகன் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தனுஷின் மூத்த மகன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தனுஷின் மூத்த மகன் 17 வயது சிறுவன் என்ற நிலையில், சிறுவனாக இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்