கரோனா ஊரடங்கு சில கட்டுப்பாடுகளோடு தளர்த்தப்பட்டுள்ளது. கடற்கரை உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களுக்குச் சுற்றுலா பயணிகள் செல்லலாம் என தளர்வில் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வேளாங்கண்ணி கடற்கரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். மக்கள் கூட்டத்தால் இன்று கடற்கரை, வேளாங்கண்ணி பேராலயபகுதிகள் கலை கட்டியது.
இன்று முதல் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பெங்களூர், கேரளா, சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மாதா பேராலயத்தின் கட்டிடக் கலையைக் கண்டு ரசித்தனர். அதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த பயணிகள் வேளாங்கண்ணி கடற்கரை மணலில் அமர்ந்தும், கடல் அலையில் விளையாடியும் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர். கடந்த 4 மாதங்களாக வெறிச்சோடிக் கிடந்த வேளாங்கண்ணி கடற்கரை, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இன்று மக்கள் கூட்டத்தினால் கலை கட்ட துவங்கியிருக்கிறது.